தமிழ்ப்புத்தாண்டு இந்து பண்டிகை, கிறித்தவர்கள் முஸ்லிம்கள் கொண்டாடுவதில்லை எச்.ராஜா

வியாழன், 2 டிசம்பர் 2021 (08:24 IST)
தமிழ் புத்தாண்டு இந்து பண்டிகை என்றும் கிறிஸ்தவர்கள் மற்ற முஸ்லிம்கள் இதனை கொண்டாடுவதில்லை என்றும் பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார்
 
அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்யும்போது தமிழ்புத்தாண்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் திமுக தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் தமிழ் புத்தாண்டை மீண்டும் தை ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்றுவதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது குறித்து நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் தற்போது பாஜக பிரமுகர் எச்.ராஜா இது குறித்து கூறியிருப்பதாவது:
 
திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்பும்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்