இரண்டு டி 20 கோப்பைகளை வென்று தந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓய்வு!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (17:15 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மார்லன் சாமுயேல்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தகுந்த வீரர்களில் ஒருவர் மார்லன் சாமுயேல்ஸ். இவர் பெயரை சொன்னதுமே நினைவுக்கு வருவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு டி 20 உலகக் கோப்பைகளை வென்று தந்ததுதான். 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி 20 உலகக்கோப்பையை வென்ற போது இறுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பெற செய்தவர் சாமுயேல்ஸ்.

இவர் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகள், 207 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 67 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக 11,000 ரன்களைக் குவித்த சாமுயேல்ஸ் 150 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது தனது 39 ஆவது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்