ஆசிய கோப்பை போட்டிக்காக மலிங்காவை களமிறக்கும் இலங்கை

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (19:20 IST)
ஆசிய போட்டிக்கான இலங்கை அணியில் மலிங்கா இடம்பெற்றுள்ளார்.

 
வரும் 15ஆம் தேதி ஆசிய கோப்பை 2018 போட்டிகள் தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகிறது.
 
இன்று ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த பந்துவீச்சாளர் மலிங்கா இடம்பெற்றுள்ளார்.
 
இலங்கை அணி கடந்த உலகக்கோப்பை போட்டிக்கு பின் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் வீரர்கள் மற்றும் கேப்டனகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.
 
இலங்கை அணி கடைசியாக விளையாடிய 12 ஒருநாள் தொடர்களில் வெறும் 2 மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியி வெகு காலமாக இடம்பெறாமல் இருந்த மலிங்கா தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்