இந்நிலையில் தற்போது அவர் கபில்தேவ்வின் 33 ஆண்டுகால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளர். 1991 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் கபில்தேவ் 25 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். அதுவே இந்திய பவுலர் ஒருவர் ஆஸ்திரேலியா தொடரில் வீழ்த்திய அதிக விக்கெட்களாகும். ஆனால் இப்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.