ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தாவிடம் சரண்டர் ஆன குஜராத் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் குவித்தார்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய கொல்கத்தா ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 14.5 ஓவர்களில் 184 எடுத்து அபார வெற்றி பெற்றது., தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் காம்பீர் 76 ரன்களும், லின் 93 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் லின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.