181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

Mahendran

சனி, 4 ஜனவரி 2025 (10:07 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஆஸ்திரேலியா அணியின் முதல் ஸ்கோர் குறைந்துள்ளது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் 185 ரன்கள் எடுத்து, ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து, ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.

அபாரமாக பந்துவீசி, இந்திய பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த நிலையில், இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும் நிலையில் 17 ரன்கள் எடுத்துள்ளது. அந்த 17 ரன்களையும் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் எடுத்துள்ளார் என்பதும் இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்