இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து கோலி விலகல்; இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:39 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் முன்னணி நடிகைகளின் ஒருவரான அனுஷ்காவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாது என கோலி ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டாரம். திருமணத்தை மனதில் வைத்துதான் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் போட்டியில் கலந்துக்கொள்ள முடியாது என கோலி கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
கடந்த ஆண்டே இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் தள்ளி போனது. இந்நிலையில் வரும் டிசம்பர் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெறுவது உறுதி என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்