கேப்டனாகும் ரோகித்; கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ-யின் யுக்திதான் என்ன??

திங்கள், 23 அக்டோபர் 2017 (11:16 IST)
இந்திய அணி கேப்டனாக உள்ள விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கவுள்ளதாகவும், ரோகித் சர்மாவை கேப்டனாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   


 
 
இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக ஓய்வு இன்றி போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருக்கிறார் கோலி. 
 
நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாட இருக்கின்றது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கின்றது. 
 
அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்துவிட கூடாது என எண்ணி இந்த இரு தொடர்களுக்காக இந்திய அணியில் மாற்றங்களை கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 
 
அதன்படி, இலங்கை தொடருக்கு புஜாரா, அஸ்வின், ஜடேஜா, சாகா, முரளி விஜய் ஆகியோர் களம் இறக்கப்படலாம் என்றும் ரஹானே, தவான், பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் கோலிக்கு சில போட்டிகளில் ஓய்வு அளித்துவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்