கொல்கத்தாவின் ஆட்டநாயகன் கேதார் ஜாதவ்! நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (08:42 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜாதவ் களம் இறங்கும் வரை சென்னை அணியின் வெற்றி பிரகாசமாக இருந்தது 
 
ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடி வந்த வாட்ஸ்அப் மற்றும் அம்பத்தி ராயுடு இலக்கை நோக்கி ரன்களை குவித்து வந்தனர் 
 
ஒருகட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் அதன் பின் பின்னர் தோனி, சாம்கரனுடன்  இணைந்து ஓரளவுக்கு ரன்களை அடித்து வந்தார்
 
ஒரு கட்டத்தில் தோனி மற்றும் சாம் கர்ரன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, சென்னை அணியின் வெற்றி பெற 21 பந்துகளில் 39 ரன்கள் என்ற நிலை இருந்தது 
 
இந்த இலக்கை மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் கேதார் ஜாதவ் மிக மோசமாக விளையாடினார். 12 பந்துகளை சந்தித்த அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது தான் நேற்று தோல்விக்கு முக்கிய காரணம்
 
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது கொல்கத்தாவின் ராகுல் த்ரிபாதிக்கு கிடைத்தாலும் உண்மையில் கொல்கத்தாவை பொருத்தவரை ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் கேதார் ஜாதவ் தான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்