யார்ரா அந்த பையன்? அசுர பாய்ச்சலில் அஸ்வானி குமார்..! முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

vinoth

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (06:57 IST)
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்று கலக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக விளையாடி வருகின்றது. அந்த அணியில் இருந்து சில வீரர்கள் வெளியேறியது, கேப்டன்சி மாற்றத்தால் ஏற்பட்ட குளறுபடி என தடுமாறி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப் பட்டியலில் பின் வரிசையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதன் பின்னர் ஆடிய மும்பை அணி அந்த இலக்கை 13 ஓவர்களில் எட்டியது. மும்பை அணியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் அஸ்வானி குமார் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக திகழ்ந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்