அந்த சாதனையை செய்யும் மூன்றாவது நபர் ஜடேஜாதான் – டிவிட்டரில் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:54 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மூன்று வடிவிலான போட்டிகளிலும் 50 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி 50 ஆவது போட்டியாகும். இதன் மூலம் அவர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் 50 போட்டிகள் விளையாடிய மூன்றாவது நபர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் இந்திய அணியின் கேப்டன்களான கோலியும், தோனியும்.

ஜடேஜா இதுவரை 50 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜடேஜா டிவிட்டரில் சக வீரர்கள், பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்