’’குவியும் விருதுகள்’’...விராட் கோலி நன்றி தெரிவித்து டுவீட்… ரசிகர்கள் நெகிழ்ச்சி

திங்கள், 28 டிசம்பர் 2020 (20:13 IST)
கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுக்கு விராட் கோலியும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தோனியும் ஐசிசியின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி அமைப்பு வருடம் தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கிக் கெரவித்துவருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை உள்ளிட்ட மூன்று கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ள தோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும், இந்திய அணியின் தற்போதைய கேப்டனும் இளைஞர்களின் சிறந்த வீரராக உள்ள விராட் கோலிக்கு கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர்  மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ’’நான் எனது நன்றியை என் குடும்பத்திற்குத் தெரிவிக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக எனது நண்பர்களும் மக்களும் என்னுடன் துணைநின்றுள்ளனர் மற்றும் பிசிசிஐ எனக்கு நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கி நான் தேசத்திற்குய் சேவையாற்றும் பெருமிதத்தைக் கொடுத்துள்ளது இத்தனை ஆண்டுகளில். எனக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்து அங்கீகரித்த ஐசிசிக்கு நன்று மற்றும் எனக்கு ஓட்டுப்போட்ட அனைத்து மக்களுக்கு எனது நன்றிகள்.இந்த டுவீட்டை பத்தாண்டுகளுக்கு முன் பதிவிட்டேன். அதில், இந்த பயணத்தில் கிடைத்துள்ள வாய்ப்புக்காக உங்களை நம்புங்கள்…மற்றும் சரியான காரணத்திற்காக விளையாடுங்கள்…கனவில்லை என்றால் பெரிய லட்சியம் சாத்திய்மில்லை. அத்துடன் சவால்களும் தடைகளும்தான். நீங்கள் தொடர்ந்து முன்னே செல்ல செல்ல  கனவுகளும் நம்பிக்கையும் உண்மையில் திருப்புமுனை நிகழ்த்தும், திரும்பவும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

https://t.co/auzv5pMiqf pic.twitter.com/MWNXEdupZ6

— Virat Kohli (@imVkohli) December 28, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்