ஐபிஎல்-2023: டான்ஸ் வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் அதிரடி முடிவு

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (19:19 IST)
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் -2023, 16வது சீசன் இந்தியாவில் நடைபபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய 17 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி  பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டி தோனிக்கு 200 வது போட்டியாகும். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 199 போட்டிகளில்,120ல் வெற்றியும், 78 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்