இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடிய நிலையில் இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டினர். இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்த, பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் காரணமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை தென்னாபிரிக்க அணியுடன் இறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் அந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.