Worldcup T20: வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்குமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் மோதல்!

Prasanth Karthick

வியாழன், 27 ஜூன் 2024 (08:31 IST)

Worldcup T20 2024 போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.

 

உலகக்கோப்பை டி20 போட்டிகள் இந்த ஆண்டு அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டிகளின் பரபரப்பான லீக், சூப்பர் 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற இந்திய அணி இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இன்று இங்கிலாந்தை வெற்றிக் கொண்டால் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா மோதும்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் டி20 போட்டிகளில் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 12 முறையும், இங்கிலாந்து 11 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. இரு அணிகளும் சம பலத்தில் களம் காண்கின்றன.
 

ALSO READ: ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரருக்குப் பதில் ஷிவம் துபே உள்ளே!


அதுமட்டுமல்லாமல் கடந்த 2022ல் நடந்த டி20 போட்டியில் இதேபோல அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. அப்போது இந்தியா 169 ரன்கள் டார்கெட் வைக்க, அதை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்து இமாலய வெற்றி பெற்றது. அதற்கு பின்னர் தற்போது மீண்டும் இரு அணிகளும் அரையிறுதியில் மோதிக் கொள்கின்றன. அதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்? இந்தியா பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த அரையிறுதி போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசும்போது “மைதானத்தின் தன்மையை பார்த்து அதற்கு ஏற்றவாறு 4 சுழற்பந்து வீச்சாளர்களை இறக்குவது குறித்து முடிவு செய்வோம். அதுகுறித்து அதிகமாக சிந்தித்தால் நெருக்கடிதான் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்