பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த மோசடியை செய்தது… பாக் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

vinoth

வியாழன், 27 ஜூன் 2024 (07:45 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று காலை முதல் அரையிறுதிப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது.

அதன் பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடக்க வுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியே காணாமல் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்து விக்கெட்களைக் கைப்பற்றியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “இந்திய நிர்ணயித்த 119 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் துரத்தும் 88 ரன்கள் வரை 5 விக்கெட்களைதான் இழந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. அப்போது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தி, ரிவர்ஸ் ஸ்விங் செய்து விக்கெட்களைக் கைப்பற்றினார். இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும். இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இன்ஸமாமின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்