இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரை இந்தியா 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 109 ரன்கள் மற்றும் திலக் வர்மா 120 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து, 284 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று, சொந்த மண்ணில் பரிதாபமாக தொடரை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாகவும், இந்த தொடரின் ஆட்ட நாயகனாகவும் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார்.