சமீபத்தில் நடந்த உச்சி மாநாடு ஒன்றில் பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி, "நான் தினமும் 14 மணி நேரம் வேலை செய்தேன். 1986 ஆம் ஆண்டு, வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வாரத்திற்கு ஆறு நாள் ஆகும் வேலை அவசியம். தினமும் இளைஞர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்தால் தான் இந்தியா பொருளாதாரரீதியில் வளர்ச்சி அடைய முடியும். ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்தது," என்று கூறினார்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "முதலாளி வர்க்கத்தின் அடிமையாக மக்களை வேலை செய்யச் சொல்கிறார்," என்றும், "தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட விருப்பம், பொழுதுபோக்கு இல்லாமல் தினமும் 12 மணி நேரம் வேலை செய்யச் சொல்வது அநியாயம்," என்றும் கூறி வருகின்றனர்.
மேலும், "இன்னொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் ஏன் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்? நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கொடுத்தால் அவ்வாறு வேலை செய்ய தயார்," என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.