‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

vinoth

திங்கள், 24 மார்ச் 2025 (09:51 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் நேற்று ‘எல் கிளாசிகோ’ என சொல்லப்படும் சென்னை vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமாக அமைந்தது. ஆனாலும் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, சி எஸ் கேவுக்கு கடும் போட்டியைக் கொடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். போட்டி முடிந்ததும் அவரை தோனி அழைத்துப் பாராட்டினார்.

விக்னேஷ் கேரளாவைச் சேர்ந்து இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர். இவர் கேரளாவுக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது. விக்னேஷின் தந்தை மலப்புரத்தில் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு ஒரு முக்கியப் பங்களிப்பாளராக விக்னேஷ் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்