இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இந்தியாவின் புவனேஷ் குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பதும் புவனேஷ் குமார் ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றதையடுத்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது