இந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடப் போகும் பிளேயிங் லெவன் அணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அணியில் கே எல் ராகுல் கடந்த சில மாதங்களாக பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.