அஷ்வின் தான் பகடைகாய்: வங்கதேச பவுலர் சர்ச்சை கருத்து!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:11 IST)
இந்தியாவின் நட்சத்திர பவுலர் அஷ்வினை தான் ஆயுதமாக பயன்படுத்த போவதாக வங்கதேச பவுலர் மெஹாதி மிராஜ் தெரிவித்துள்ளார்.


 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. 
 
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி நாயகனாக ஜொலிக்கும் அஷ்வினையே இந்திய அணிக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார் வங்கதேச பவுலர் மெஹாதி மிராஜ்.
 
இதுகுறித்து மிராஜ் கூறுகையில், போட்டியின் ஒவ்வொரு நாளிலும் அஷ்வின் பவுலிங் செய்யும் போது மிகவும் கவனமாக கவனிப்பேன். பவுலிங்கில் அஷ்வின் பயன்படுத்து உக்திகளை தெளிவாக கவனித்து அதை மிகச்சரியான முறையில் பயன்படுத்துவேன். அப்போது இந்திய அணி தடுமாறும். அவரது அணிக்கு எதிராக அவரையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என்றார்.
அடுத்த கட்டுரையில்