புரோ கபடி போட்டிகள்: ஹரியானா, பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (22:18 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டி உத்தரபிரதேசம் அணிக்கும் ஹரியானா அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் சுதாரித்த ஹரியானா அணி வெற்றி பெற்றது. ஹரியானா அணி இன்றைய போட்டியில் 36 புள்ளிகளும் உத்தரப்பிரதேச அணி 33 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே புள்ளிகள் எடுக்க தடுமாறினர். போட்டி கடுமையாக இருந்ததால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி கடைசி நிமிடம் வரை இருந்தது. இந்த நிலையில் குஜராத் அணி 26 புள்ளிகளும் பெங்கால் அணி 28 புள்ளிகளும் எடுத்ததால் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி அணி 26 புள்ளிகளும், பெங்கால் அணி 25 புள்ளிகளும், பெங்களூர் அணி 22 புள்ளிகளை பெற்று முதல் மூன்று இடத்தில் உள்ளன. ஹரியானா, ஜெய்ப்பூர் மற்றும் தமிழ்தலைவாஸ் ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்