ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து 3 பேர் திடீர் விலகல்

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (22:04 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளையும் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எனவே அடுத்தடுத்த சுற்றுக்களிலும் நன்றாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென காயம் காரணமாக ஹர்திக் பாண்டே, அக்சார் பட்டேல் மற்றும் ஷர்துர் தாக்கூர் ஆகிய மூவரும் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் மூவரும் நாடு திரும்பவுள்ளதாக தெரிகிறது.

முக்கிய வீரரும் ஆல்ரவுண்டருமான ஹர்திக் பட்டேலுக்கு பதில்  தீபக் சாஹர் அல்லது தமிழக வீரர் விஜய் சங்கர் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும், ஆல்ரவுண்டர் தேவை என்றால் விஜய் சங்கருக்கும், பந்து வீச்சாளர் தேவை என்றால் தீபக் சாஹருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்