ஸ்டோக்ஸ் கேட்ச்சை பிடித்த தவான்… விழுந்து கும்பிட்ட ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:45 IST)
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது.

நேற்று புனேவில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் கடைசிநேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி கடைசி வரை உறுதியாகாமல் இருந்ததற்கு மோசமான பீல்டிங்கே காரணம். ஸ்டோக்ஸ், சாம் கர்ரன் மற்றும் மார்க் வுட் ஆகியோரின் கேட்ச்களை ஹர்திக் பாண்ட்யா, நட்ராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் கோட்டை விட்டனர்.

இந்நிலையில் ஸ்டோக்ஸ் நட்ராஜன் பந்தில் சிக்ஸ் லைன் அருகே தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது ஹர்திக் பாண்ட்யா தவானைப் பார்த்து மரியாதை செய்யும் விதமாக விழுந்து கும்பிட்டார். இந்த காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்