ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது சரியான முடிவுதான் – ஹர்பஜன் சிங் பதில்!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:33 IST)
ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது சரியான முடிவுதான் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினர். சென்னை அணியும் இதுவரை இல்லாத அளவுக்கு படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து தான் வெளியேறியது சரியான முடிவுதான் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘கோவிட் நெருக்கடி காரணமாக குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு நான்தான். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்