கோல் கீப்பர் கோல் போட்டு பார்த்ததுண்டா? இதோ இந்த வீடியோவை பாருங்கள்

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (02:02 IST)
கால்பந்து விளையாட்டில் இதுவரை கோல்கீப்பர் கோல்களை தடுத்துதான் பார்த்திருப்போம். ஆனால் கோல்கீப்பரே கோல்போட்ட அதிசய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் நடைபெற்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து தொடர் ஒன்றில் சமீபத்தில்  CD Lugo மற்றும் Sporting Gijon அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் CD Lugo அணியின் கோல்கீப்பர் அடித்த பந்து நேராக கோல் ஆகிய அதிசயம் நடந்துள்ளது. இதனை பார்த்து Sporting Gijon அணியின் கோலிகீப்பர் உள்பட அனைத்து வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த ஆட்டத்தில் CD Lugo அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது

இந்த கோலை அடித்த சரித்திர சாதனை மிக்க கோல்கீப்பரின் பெயர்  ஜுவான் கார்லஸ். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவர் கடநத சில ஆண்டுகளாக CD Lugo அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர் இந்த சாதனை கோலை போட்ட மறுநாள் தான் இவரது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்