அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்து பேசியதற்கு, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை விமர்சித்த கிருஷ்ணபிரியா, தெர்மகோல் புகழ் அமைச்சர் மனிதாபிமானம் மற்றும் அரசியல் நாகரிகத்தை இனியாவது கற்றுக்கொள்வது நல்லது என்றும் அரசியல்வாதிகள் மீது அரசியல்ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாமே தவிர அவரவர் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல் என்றும் கூறினார்.