வைரலாகும் தோனியின் இன்ஸ்டாகிராம் வீடியோ!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (16:43 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 
இந்திய கிரிக்கெட் அணி கோலி தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், தற்போது ஓய்வில் தோனி ஒரு சாகச வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
அந்த வீடியோவில், மழை பெய்து கொண்டிருக்க, தோனி தனது காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு, கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு, தனது வாயில் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு  கால் தரையில் படாமல் சரிவான பாதையில் சைக்கிளை ஓட்டி செல்கிறார். 
 
இந்த வீடியோவை பதிவேற்றியதோடு, இது வேடிக்கை ஆனதுதான்... இதனை வீட்டில் முயற்சி செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 

Just for fun, plz try it at home.

A post shared by M S Dhoni (@mahi7781) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்