இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சிறப்பான பேட்டிங், கீப்பிங் மூலம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து போட்டியில் மட்டுமில்லாமல், பல்வேறு விளம்பரங்கள், விளம்பர தூதர் என்ற பல பதவிகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பீகார் - ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் தோனி முதல் இடத்தை பிடித்துள்ளார். 2017-18 ஆம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் வரியாக கட்டியுள்ளார்.
2016-17 நிதி ஆண்டில் ரூ.10.93 கோடியை கட்டியுள்ளார். இதன்மூலம் கடந்த நிதியாண்டை விட ரூ.1.24 கோடி கூடுதலாக தோனி வருமானவரி கட்டியுள்ளார் எனபது தெரியவந்துள்ளது.
தோனி கடந்த 2013-14 ஆம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6 வது ஆண்டாக அவர் பீகார் - ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.