தல என்ற மஞ்சள் நிற ஜெர்சியுடன் தோனி; ரசிகர்கள் ஆரவாரம்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (14:38 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள நிலையில் தோனி தல என்று பெயரிடப்பட்ட மஞ்சல் நிற ஜெர்சியுடன் போஸ் கொடுத்துள்ளார்.


 

 
ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளில் மிகவும் பிரபலமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு முக்கிய காரணம் அதில் தோனி கேப்டனாக இருப்பது. அதை அதவிர்த்து மற்ற அணிகளை விட பலமான வீரர்களை கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.
 
மேட்ச் பிக்ஸிங் காரணமாக 2 அண்டுகள் இந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அணியை வரவேற்கும் விதமாக கொண்டாட தொடங்கிவிட்டனர்.
 
இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வர உள்ளதை மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தல என்று ஆங்கில எழுத்துகளில் பெயரிடப்பட்டுள்ள ஜெர்சியை அணிந்துள்ளார். 
 
இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தோனி மற்றும் அவரது படையின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்