தோனியின் மூன்று முகம்: டுவிட்டர் போரில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (19:27 IST)
ஐபிஎல் அணிகளில் எந்த அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர் என்பது குறித்து ஐபிஎல் அணிகளுக்கு இடையே திடீரென ஒரு வாக்குவாதம் டுவிட்டரில் கிளம்பியது.

இந்த விவாதத்தில் முதலில் களமிறங்கிய மும்பை அணி ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஆகிய மூவர் உள்ள தங்கள் அணியே சிறந்த ஆல்ரவுண்டர் உள்ள அணி என்று பதிவு செய்தது.

இதற்கு பதிலடியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்கள் அணியில் உள்ள முகமது நபி, ரஷீத்கான், ஷாகிப் அல்ஹசன் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் தங்கள் அணியே சிறந்த ஆல்ரவுண்டர்களை கொண்ட அணி என்று பதிவு செய்தது.

இதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த மும்பை தாங்கள் மூன்று முறை கோப்பை வென்றதை குறிப்பிட்டு இன்னும் கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாக சன்ரைசர்ஸ் அணியை கலாய்த்தது. அதேபோல் திடீரென களத்தில் குதித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், சுனில் நரைன், ஜாக் காலீஸ், ஆந்த்ரே ரஸல் படங்களை வெளியிட்டு எங்கள் அணியே சிறந்த ஆல்ரவுண்டர் அணி என்றது

இந்த நிலையில் இந்த வாக்குவாதத்தில் களமிறங்கிய சிஎஸ்கே அணி, மூன்று தோனியின் புகைப்படத்தை வெளியிட்டு எங்கள் அணியில் தனித்தனியாக ஆல்ரவுண்டர்கள் தேவையில்லை, தல தோனி 3 ஆல்ரவுண்டருக்கு சமம் என்பதை குறிக்கும் வகையில் 'மூன்று முகம்' என்று பதிவு செய்துள்ளது

இந்த பதிவுக்கு பின் மற்ற அணிகள் கப்சிப் என அமைதியாகிவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்