மோசமான பவுலிங் – தரவரிசையில் கீழிறங்கிய பூம்ரா !

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (08:11 IST)
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக பந்து வீசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் பூம்ரா தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வொயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. மேலும் இந்திய அணிக்குக் காயத்துக்குப் பிறகு மீண்டு வந்த பூம்ரா ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தோல்வி தரவரிசைப் பட்டியலில் பிரதிபலித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முதல் இடத்தில் இருந்த அவர் இப்போது 45 புள்ளிகள் கீழிறங்கி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல்:-
போல்ட் – 727
பும்ரா – 719
முஜீப் – 701
ரபடா – 674
கம்மின்ஸ் – 673
வோக்ஸ் – 659
அமீர் – 656
ஸ்டார்க் – 645
ஹென்றி – 643
ஃபெர்குசன் – 638

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்