193 என்ற இமாலய இலக்கு கொடுத்த பெங்களூரு: டக் அவுட் ஆன 2 ஐதராபாத் பேட்ஸ்மேன்கள்!

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (18:13 IST)
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 54வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்தது 
 
பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக டூபிளஸ்சிஸ் 73 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில்  193 என்ற இமாலய இலக்கை நோக்கி தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. ஐதராபாத் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அந்த அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் வரை ஹைதராபாத் அணி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்