புரோ கபடி 2018: டிராவில் முடிந்த பரபரப்பான பெங்களூர்-பாட்னா போட்டி

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (23:42 IST)
கடந்த மூன்று மாதங்களாக 2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டி ஒன்று டையில் முடிந்தது.

இன்று பெங்களூரு மற்றும் பாட்னா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது. இறுதி வரை எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத அளவில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்து வந்தன. இறுதியில் இரு அணிகளும் 40-40 என்ற சம அளவில் புள்ளிகள் பெற்றதால் போட்டி டிராவில் முடிந்தது.

இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை 33-31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்