D/L முறையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: 300 ரன்கள் அடித்து இலங்கை தோல்வி

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (07:53 IST)
D/L முறையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: 300 ரன்கள் அடித்து இலங்கை தோல்வி
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையின்படி ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
 
முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து அபார பேட்டிங் செய்தது. மெண்டிஸ் 86 ரன்கள் அடித்தார் 
 
இந்த நிலையில் 301 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதனை அடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ஆஸ்திரேலிய அணிக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் அடைந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்