மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (07:52 IST)
மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது 
 
இந்த போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. 
 
இதனை அடுத்து 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்