கடைசி நாளில் விறுவிறுப்பான கட்டத்தில் ஆஷஷ் தொடர்.. வெற்றியை நெருங்கிவிட்டதா ஆஸ்திரேலியா?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (15:32 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஷ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடர் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது 
 
இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 273 ரன்கள் எடுத்தது.
 
 இந்த நிலையில் முதலில் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு ஆட்டம் இழந்த ஆஸ்திரேலியா அணி 281 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது. 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி  சற்று முன் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதும் கைவசம் ஏழு விக்கெட் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்