ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இடம்பெறாதது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் டி 20 தொடரான ஐபிஎல் தொடரில் கூட அவரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றிக் கோலியிடம் கேள்வி எழுப்பியபோது டி 20 அணியின் சுந்தர் இடம்பிடித்து பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு இடத்துக்கு ஒரே மாதிரியாக இரு பந்துவீச்சாளர்களை சேர்ப்பது கடினம். சுந்தர் மோசமாக விளையாடினால் அஸ்வினுக்கு இடம் கிடைத்திருக்கும். இதுபோன்ற கேள்விகளை தர்க்கப் பூர்வமாகதான் அனுக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி அஸ்வின் அளித்த நேர்காணலில் எப்போதும் நமக்கு நாமே போட்டியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எல்லோரும் நான் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறவில்லை எனக் கேட்கின்றனர். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.