சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நேற்றோடு நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.
அப்படி கடந்த சீசனில் மிகச்சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸை மும்பை அணி ஏலத்தில் எடுத்த போது ஆர் சி பி RTM செய்யவில்லை. அதனால் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பெங்களூர் அணி நிர்வாகிகளைக் கட்டியணைத்து நன்றி தெரிவித்துள்ளார். ஒரு சிறப்பான ஆல்ரவுண்டரை மிகக்குறைவான விலைக்கு வாங்கிய மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.