இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்கள்… 1000 ரன்கள் – அஸ்வினின் புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:51 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்ச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்கள் மற்றும் 1000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின், சென்னையில் நடந்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் சதமடித்து அசத்திய அவர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும் வீழ்த்தினார். இந்நிலையில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 45 போட்டிகளில் (மூன்று வடிவிலான போட்டிகள்) விளையாடி 106 விக்கெட்களையும் 1000 ரன்களையும் கடந்துள்ளார். இந்த சாதனையின் மூலம் அவர் கபில் தேவின் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்