டெஸ்ட் ஆட்டத்தின்போது கேட் ஏறி குதித்த இளைஞர்! இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட்டில் பரபரப்பு!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (14:57 IST)
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது இளைஞர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 432 ரன்கள் முன்னிலையில் தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு எல்லையை தாண்டி இளைஞர் ஒருவர் மைதானத்துக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் அவர் 15 வயதான நிகித் என்ற சிறுவன் என்றும், 2 வருடங்களுக்கு முன்னாள் அஸ்வினிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்ற அந்த சிறுவன் அஸ்வினை சந்திக்க மைதானத்திற்குள் சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்