இலங்கைக்கு இரண்டாம் தோல்வி: அடித்து நொறுக்கிய ஆப்கானிஸ்தான்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (07:05 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே வங்கதேசத்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது. ரஹ்மத் ஷா 72 ரன்களும், இஹ்சானுல்லா 45 ரன்களும் எடுத்தனர்.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இந்த தொடரின் அடுத்த போட்டியக இன்று இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்