இலங்கை அணிக்கு வெகு நாட்கள் கழித்து திரும்பிய மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருந்தும் வங்காளதேச அணி 261 ரன்கள் குவித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 124 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வங்காளதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.