பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் ஷமி கிடையாது.. காரணம் இதுதான்!

vinoth

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (07:29 IST)
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் ஷமி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் இறுதி 2 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் “ஷமியின் இடது காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக அவரால் கடைசி இறுதிப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறவில்லை” என மருத்துவக் குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்