ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள்.. எப்படி சாத்தியம்?

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (16:34 IST)
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் காபுல் பிரீமியர் லீக் தொடரில் பேட்ஸ்மேன் ஒருவர் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர் உள்பட 48 ரன்கள் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தானை சேர்ந்த செதிகுல்லா அடல் என்பவர் ஒரே ஓவரில்  ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஒரு நோபாலில் ஒரு சிக்சர் அடித்தார்.  இவர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் நோபாலில் ஒரு சிக்சர் மற்றும் வைடு  என ஒரே ஓவரில் அணிக்கு 48 ரன்கள் பெற்று கொடுத்துள்ளார்.
 
இதனையடுத்து ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்த ருத்ராஜ் கெய்க்வாட் சாதனையை இவர் சாதனையை சமன் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்