2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது என்பதும், இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இந்தாண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அணிகள் போட்டியில் நேரடியாக பங்கேற்கும். ஆனால் வளர்ந்து வரும் அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி தகு பெற வேண்டும்
இந்த தகுதி சுற்று போட்டிகள் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், அமெரிக்கா, நமீபியா, பப்பூவா நியூகினியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்தது
இந்த நிலையில் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தற்போது தெரிவித்துள்ளது. அதேபோல், இளையோருக்கான உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்தி வைக்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகள் மற்றும் இளையோருக்கான உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகள் வரும் டிசம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது