6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

vinoth

புதன், 12 மார்ச் 2025 (14:38 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நியுசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதும் வீரர்கள் ஒவ்வொருவரும் கோப்பையை தங்களோடு வைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் ஹர்திக் பாண்ட்யா மைதானத்தின் நடுவே கோப்பையை வைத்து பின்னால் நின்று தன்னுடைய சிக்னேச்சர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் தற்போது சாதனைப் படைத்துள்ளது.

அந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது 6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்றது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்