ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களை உக்கப்படுத்தும் விதத்தில் தங்கம், வெள்ளி, வெண்கள பதக்கங்களை பெறும் வீரர்களுக்கு பரிசு தொகையை ரெயில்வே அறிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அவர்களுக்கு பணி உயர்வும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரெயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.