கருவில் இருக்கும் குழந்தை வீடியோ விவகாரம்.. மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

Mahendran
புதன், 22 மே 2024 (10:46 IST)
கருவில் இருக்கும் குழந்தை ஆணா. பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார்.
 
நேற்று வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு தமிழக அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரினார். மேலும் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட உள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில்  யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரிய நிலையிலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய இதை ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு பலர் வெளிநாடு சென்று குழந்தையின் பாலினம் குறித்து அறிந்து கொள்வார்கள் என்றும் எனவே மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்